புதுதில்லி, ஏப். 22 -நரேந்திர மோடி, இந்திய நாட்டின் பிரதமரா அல்லது அம்பானி, அதானியின் மேலாளரா? என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சித்து மேலும் கூறியிருப்பதாவது:இந்தியப் பிரதமர் ஒருவர், முதன்முறையாக ஒரு தனியார் விளம்பரத்தில் தோன்றியசம்பவம் என்றால், அது ரிலை யன்ஸ் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தோன்றியதுதான். அந்த அள விற்கு முதலாளிகளோடு அவர் நெருக்கமாக இருக்கிறார். மோடி ஆட்சியில் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. தனியார் நிறு வனங்கள் கொள்ளை லாபம்சம்பாதிக்கின்றன. இதை யெல்லாம் பார்த்தால் நரேந்திர மோடி, நாட்டுக்குப் பிரதமரா, அம்பானி, அதானி கம்பெனி களின் வர்த்தக மேலாளரா? என்ற கேள்விதான் எழுகிறது.இந்திய மக்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பில் பாதி, வெறும் 9 பெரும் பணக்காரர்களிடம் உள்ளது. போதிய உணவு கிடைக்காத 119 நாடுகளின் பட்டியலில், 103-ஆவது என்ற இடத்தில் இந்தியா இருக்கிறது. உலக நாடுகளில் நமதுநாட்டின் பலமடங்கு கடன்தொகை அதிகரித்துள்ளது. நாட்டின் காவலாளி என்று பிரதமர் கூறுகிறார். இதுதான் பிரதமர் மோடி தேசத்தைப் பாதுகாக்கும் லட்சணமா? இதுதான் பிரதமர் மோடியின் தேசியவாதமா? முடிந்தால், என்னு டன் தேசியவாதம் குறித்து பேசுவதற்கு மோடி தயாரா?இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளால் சித்து விளாசித் தள்ளியுள்ளார்.