புதுதில்லி, ஏப்.2- மாணவர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, பணியாளர் தேர்வாணையத் தலைவர் (Staff Selection Commission) அசிம் குரானாவின் பதவிக்காலத்தை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். இது தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் கள் கசிந்ததையொட்டி, அசிம் குரானா ராஜினாமா செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அவர் ராஜினாமா செய்யவில்லை. இதனிடையே, அவருடைய பதவிக்காலம் தானாகவே முடியப் போகும் நிலையில், அவருக்குபணி நீட்டிப்பு வழங்கி, லட்சக்கணக்கான மாணவர்களை நரேந் திர மோடி வஞ்சித்துள்ளார்.அசிம் குரானாவின் பணிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று சட்ட அமைச்சகமும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் (ருஞளுஊ) எழுத்துப் பூர்வமாக ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்த போதிலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு பிரதமர் நரேந்திரமோடி பணி நீட்டிப்பை வழங்கியுள்ளார்.இவ்விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்தற்போது வெளியே வந்துள்ளது. அசிம் குரானாவுக்கு எதன்அடிப்படையில் பணி நீட்டிப்புவழங்கப்பட்டது என்றும் ஆர்டிஐ-யின் கீழ் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பதவி நீட்டிப்புக்காக பிரதமர் கூறியுள்ள காரணங்களைஅளிக்க முடியாது என்றும் அவைகமுக்கமானவை (ஊடிகேனைநவேயைட) என்றும் மோடி அரசு தப்பித்துள்ளது.
மோசடிக்குத் துணைபோகிறார் மோடி ‘யுவ ஹல்லா போல்’ அமைப்பு குற்றச்சாட்டு
“குரானாவின் பதவிக்காலத்தை சட்ட விரோதமாகவும் அரசமைப்புச் சட்டத்திற்குஎதிராகவும் நீட்டித்திருப்பதன் மூலம்- நாட்டில் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில்- ஊழலில் ஈடுபட்டபேர்வழிக்கு பிரதமர் மோடி துணைபோயிருக்கிறார்” என்றுஅனுபம் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் அமைப்புகளின் பொதுமேடையான ‘யுவ ஹல்லாபோல்’ எனும் அமைப்பின் தலைவர்தான் அனுபம் ஆவார். அவர்தில்லி பிரஸ் கிளப்பில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த குற்றச் சாட்டை வைத்துள்ளார்.“சென்ற ஆண்டு வினாத்தாள் கள் கசிந்தது தொடர்பான விசாரணை இன்னும் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் முடிக்கப் படவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி வீதியில் நிற்கின்றனர். எனினும், பிரதமர் மோடி குரானாவைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கிறார்,” என்று கண்ணையாகுமாரும் விமர்சித்துள்ளார். (ந.நி.)