புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர், சாமியார் சின்மயானந்தா (72). பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான இவர், தனக்குச் சொந்தமான சட்டக்கல்லூரியில் படிக்கும் 23 வயது மாணவியை,மிரட்டி பாலியல் வல்லுறவுக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் (SIT), கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்மயானந்தாவுக்கு எதிராகஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 43 வீடியோ ஆதாரங்கள், பாதிக்கப்பட்ட மாணவி அளித்தவாக்குமூலம், சின்மயானந்தாவின் கல்லூரி முதல்வர்கள் 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், அவர்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.இதனிடையே, பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள சின்மயானந்தா, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், ‘தனதுசெயல் தனக்கே அசிங்கமாக இருக்கிறது’ என்று, விசாரணையின் போது கூறி, நாடகம் போட்டதாகவும் விசாரணை அதிகாரியான ஐ.ஜி. நவீன் அரோரா தெரிவித்துள்ளனர்.“சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை மிரட்டி, அவருடன் மொபைல் போனில் பலமுறை பாலியல் ரீதியாக பேசியுள்ளேன்; நிர்வாணமான நிலையில், என்உடலை மசாஜ் செய்ய வைத்துள்ளேன்; தயவுசெய்து, இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்; சொல்லவே எனக்கே அசிங்கமாக உள்ளது” என்று சின்மயானந்தா அழாத குறையாக வாக்குமூலம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர். சின்மயானந்தா - மாணவி இடையிலான 230 தொலைபேசி அழைப்பு பதிவுகளை காவல் துறை கண்டறிந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.