படோஹி:
கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பசிக்கொடுமையால் வாடிய தனது ஐந்து குழந்தைகளை பெண் ஒருவர் கங்கை ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி மாவட்டம் ஜெகாங்கிராபாத்தில் ஞாயிறன்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தைகளை ஆற்றில் வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மனநலம் குன்றியவர் என்றும் கொரோனாவல் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கமுடியாத நிலையில் இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டதாகவும், அவர் தினசரி கூலித் தொழிலாளி என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.