tamilnadu

img

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்க அரசிடம் அடகு வைப்பதா? மோடி அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தில்லி 
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரும் பிப்ரவரி 24,25-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.   டிரம்புடன் மோடி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உடன்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாகப் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உடன்பாடுகள், இந்திய விவசாயிகளைக் கடுமையான நிர்ப்பந்தத்திற்கு, கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

ப்ளூ பெர்ரி, செர்ரி பழங்கள் மற்றும் சோயா பீன்ஸ், கோதுமை, மைதா, அரிசி உள்ளிட்ட  பொருட்களின் இறக்குமதி வரி மிகக் கடுமையான முறையில் குறைப்பதற்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட இருக்கிறது . குறிப்பாக 100 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை இறக்குமதி வரி குறைக்கப்படுவது விவசாயிகளை மிகக் கடுமையாகப் பாதிக்கும். இத்தகைய ஏகாதிபத்திய நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.