புதுதில்லி, ஏப்.18- கடந்த “2016-ஆம் ஆண்டு பணமதிப்புநீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையில் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்” என்று புதியஆய்வு ஒன்று கூறியுள்ளது. “இவ்வாறு வேலையிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் மிகவும்ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள் ளது.பெங்களூருவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், “ஸ்டேட் ஆப்வொர்க்கிங் இந்தியா- 2019” என்ற தலைப்பில், சர்வே நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது:“2018-ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த வேலையின்மை 6 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வேலையின்மை இரண்டு மடங்குஅதிகரித்துள்ளது. இந்த அளவிற்கான வேலையிழப்பு, 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே வேகமாக நடைபெற்றுள்ளது. வேலையின்மையால், ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு முன்பில்லாத அளவிற்கு சரிந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பட்டதாரி பெண்களில் சுமார் 34 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, 20 முதல் 24 வயது வரையிலான பெண்கள்தான் இவர்களில் அதிகமாக உள்ளனர்.அதேபோல, ஆண்களில் 13.5 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். படிக்காதவர்களை விட, படித்தவர்கள் மத்தியில்தான் வேலையின்மைப் பிரச்சனை அதிகம் இருக்கிறது. இதில்பெரும்பாலானோர். 2016-ஆம் ஆண்டுநவம்பர் மாதம் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவ்வாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதனிடையே ஆய்வறிக்கையை தயாரித்த குழுவில் தலைமைப் பொறுப்பை வகித்த பேராசிரியர் அமித் பசோல், “நிகரவேலைவாய்ப்புகள் ஒரு துறையில் குறைந்தால், மற்றொரு துறையில் அதிகரிக்கலாம்; ஆனால், பணமதிப்பு நீக்கத் திற்குப் பிறகு கிட்டத்தட்ட 50 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன” என்றும், “இதுஇந்தியப் பொருளாதாரத்துக்கு உகந்தது அல்ல”என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) மட்டும் பார்த்துக்கொண்டு வேலையிழப்புக்கு தீர்வுகாணாமல் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதல்ல” என்றும் கூறியுள்ளார்.