அமராவதி, ஏப்.15- பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ஆம் தேதிகர்நாடக மாநிலம் சித்ரதுர்காவுக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது, மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கறுப்பு நிற இரும்புப் பெட்டி இறக் கப்பட்டு, ஒரு காரில் ஏற்றிச் செல்லப்பட்டது. இது தற்போது சர்ச் சைக்கு உள்ளாகி இருக்கிறது. பெட்டிக்குள் என்ன இருந்தது என்றுகேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், மோடி, தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜக பிரமுகர்களுக்கு அளிப்பதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.