tamilnadu

img

கொரோனா உபதேசத்தை மறந்து நவீனுடன் கைகுலுக்கிய மோடி...

புவனேஸ்வர்:
கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு ஊடகங்களின் வாயிலாக பலமுறை உரையாற்றினார். 

“வீட்டிலேயே இருங்கள்; வெளியில் சென்றாலும், தனிமனித இடைவெளியைக் கடைப் பிடியுங்கள்; அவ்வப்போது கைகளை சோப்புப் போட்டு நன்றாகக்கழுவுங்கள்” என்று அறிவுரைகளை வழங்கினார். அவரது அறிவுரைகளில் மிகமுக்கியமாக குறிப்பிட்டது, “மக்கள் இனிமேல் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துச் சொல்வதைத் தவிர்த்து, இருகரம் கூப்பிவணக்கம் (நமஸ்தே) சொல்லுங் கள்” என்பதாகும்.ஆனால், இந்த அறிவுரையை பிரதமர் மோடியே தற்போது மீறியிருக்கிறார். ஒடிசாவில் ஆம்பன் புயல் சேதத்தை பார்வையிடச் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வரான நவீன் பட்நாயக்கின் கையை பிடித்துக் குலுக்கியதுடன், தனிமனித விலகலையும் கடைப்பிடிக் காமல் “நமஸ்தே” கூறிச் சென் றுள்ளார்.இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், அது சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, ஊருக்குத்தான் உபதேசம், அவர் எதையும் கடைப்பிடிக்க மாட்டார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.