விமான டிக்கெட்டில் இருந்த மோடியின் படத்தை அகற்றுவற்கு ‘ஏர் இந்தியா’நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.‘ ஏர் இந்தியா’ நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட் டில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி சஷிகாந்த் இதுதொடர் பாக முதன்முதலில் தனது ஆட்சேபணையைத் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் இவ்வாறு மோடி மற்றும் விஜய்ரூபானி படங்களை அச்சிட்டுவழங்குவது விதிமுறைகளுக்கு மாறானது என்று சிலர் தேர்தல் ஆணையத்துக்கும் புகார்களை அனுப்பினர்.
இதையடுத்து, மோடி படம் பொறிக்கப்பட்ட டிக்கெட்டுக் களை திரும்பப் பெறுவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவன செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார் அறிவித்துள்ளார். இந்த டிக்கெட்டுக்கள், குஜராத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக வெளியிடப்பட்டது என்றும், தற்போது தேர்தல் நடத்தைவிதி மீறல் கண்டறியப்பட்டுள் ளதால், ‘ஏர் இந்தியா’ அந்த விமான டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரயில்வேடிக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்த மோடியின் படமும் கடந்த 20-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.