கோஹா:
குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்துப் பயணம் செய்து, படகு நிறுவனம் நஷ்டம் காரணமாக அதன் இரண்டு படகுகளையும் விற்க முடிவு செய்துள்ளது.குஜராத் மாநிலத்தில் ‘ரோரோ’ என்ற படகு நிறுவனம் (RORO ferry service, Gujarat), கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதற்கட்ட படகுப் போக்குவரத்து சேவையை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அத்துடன் ‘ஐலேண்ட் ஜேட்’ எனும் படகில் பயணமும் மேற்கொண்டார். இந்த படகுச் சேவை, தெற்காசியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த சேவை என்று கூறப்பட்டது.
காம்பட் வளைகுடாவில் உள்ள கோஹாமற்றும் தாஹேஜ் நகரங்களுக்கு இடையே இந்த சேவை துவங்கப்பட்டது. இந்த 2 நகரங்களுக்கும் இடையிலான தரைவழித் தூரம்360 கிலோ மீட்டர். ஆனால், கடல் வழியில்வெறும் 31 கிலோ மீட்டர்தான் என்பதால், 8 மணிநேர பயணம், 1 மணிநேரப் பயணமாக குறைந்தது.ஆனால், துவங்கியது முதலே ‘ரோரோ’ நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது, அதானி போன்ற பெருமுதலாளிகளின் துறைமுகத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் பாஜக அரசு, ரோரோ போன்ற சிறு படகுப் போக்குவரத்து நிறுவனத்தை முற்றிலுமாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.இதனிடையே, கடந்த ஓராண்டாக, சமாளிக்க முடியாத அளவிற்கு நஷ்டம் அதி
கரித்ததால், ‘ரோரோ’ நிறுவனம் தனது இருபடகுகளையும் விற்கப் போவதாக தற்போதுஅறிவித்துள்ளது.