tamilnadu

img

பிரதமர் மோடியால் இந்தியாவுக்கு ஆபத்து... லண்டனைச் சேர்ந்த ‘தி எக்னாமிஸ்ட்’ ஏடு விமர்சனம்

புதுதில்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடியால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும், ‘திஎக்னாமிஸ்ட்’ ஏடு முகப்புக் கட்டுரைவெளியிட்டுள்ளது.“சகிப்புத்தன்மையற்ற இந்தியா” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கட்டுரையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியகுடிமக்கள் பதிவேடு உள் ளிட்ட பிரதமர்மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட் டுள்ளன.மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் மோடியும், அவரது கட்சியும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இந்தியாவை இந்து நாடாக மாற்ற பிரதமர் மோடி முயல்வதாக இந்தியாவின் 20 கோடி இஸ்லாமியர்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும்அக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது நடவடிக்கைகள் மூலம் அரசியல் அமைப்புச்சட்டத்தின் மதச்சார்பற்ற கோட்பாடுகளைசீரழிக்கிறார்; இதனால், இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்று விமர் சித்துள்ளது. மக்களிடையே, மத ரீதியில் பிளவை ஏற்படுத்தி, பாஜகவுக்கு அரசியல்ஆதாயம் தேடித்தர பிரதமர் மோடி முயற் சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.