புதுதில்லி:
மத்திய அரசின் காலிப் பணியிடங்களில், ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் பணிநியமனம் செய்வதற்கு, மோடி அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று கூறித்தான் பிரதமர் மோடி, கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்தார். ஆனால், 2019பிப்ரவரி மாதம் வரையிலான 5 ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மூலம் ஏற்கெனவே இருந்த 1 கோடியே10 லட்சம் பேரின் வேலைகள் பறிக்கப்பட்டதுதான் மிச்சமானது. இந்தியா வின் வேலையில்லாத் திண்டாட்டம், கடந்த5 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு சுமார் 7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மோடி 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள போதும், இளைஞர்களுக்கு வேலைகிடைப்பதை உத்தரவாதப்படுத்தா மல், ஓய்வுபெற்றவர்களையே மீண்டும் அரசுப் பணிகளில் நியமிக்கமுடிவு செய்துள்ளார். அதாவது, இடைக்கால நியமனம் என்ற பெயரில் இந்த வேலையில் இறங்கியுள்ளார்.இவ்வாறு நியமிக்கப்படும் ஊழி யர்களுக்கு ரூ. 35 ஆயிரம் என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும். மற்றபடி, அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்காது. முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் இவர்கள் நீக்கப்படுவார்களாம்.நிரந்தர அதிகாரிகளின் பணி யிடங்களைக் குறைத்து, அதன்மூலம் செலவினங்களைக் குறைக்கும் முயற்சிதான் இந்த நடவடிக்கை என்றும் ரயில்வே துறை, அறிவியல் துறை உள்ளிட்ட சில பிரிவுகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று மோடி அரசு கூறியுள்ளது. ஆனால், இதையே கொஞ்சம் கொஞ்சமாக மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த மோடி அரசு திட்டம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் இந்த முய ற்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.