tamilnadu

img

மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.3309 கோடி -  ஆர்பிஐ தகவல்

வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைக்க முடியாத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ3309கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் வாடிக்கையாளர்கள் எந்த வித வைப்புத் தொலையும் வைத்திருக்க தேவையில்லை. ஆனால் பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் குறைந்த பட்ச வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும்.  குறைந்த பட்ச வைப்புத்தொகை இல்லாதவர்களிடம் சேவைக் கட்டணமாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 
கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு காலத்தில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு  நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.
 இவ்வாறு வசூலிக்கப்பட்டுள்ள அபராத கட்டணங்களில், முக்கிய நான்கு தனியார் வங்கிகளில் முறையே கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 1,115.44 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 1,138.43 கோடி ரூபாயாகவும், இதுவே 2018 - 2019ம் ஆண்டில் 1,312.92 கோடி ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. 
இதேபோன்று 18 பொதுத்துறை வங்கிகளின் அபராத கட்டணம் முறையே கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 790.22 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 3,368.42 கோடி ரூபாயாகவும், இது கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 1,996.46 கோடி ரூபாயாகவும் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கியின் நிதித்துறை இணையமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.