புதுதில்லி:
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் பேச மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன் 9 உத்தரவுப்படி அனைத்து தொழிலாளர்களும் 15 நாட்களுக்குள் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்றும் ஜூன் 9 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை புரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.