tamilnadu

img

குறைந்த செலவிலான கொரோனா கிட்... இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம்

புதுதில்லி, ஏப்.25- தில்லி ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் உரு வாக்கியுள்ள பிசிஆர் கொரோனா சோதனை கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித் துள்ளது. இது குறித்து  தில்லி ஐஐடி பேராசிரி யர் பெருமாள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தி டம் கூறியிருப்பதாவது:

மிகவும் குறைவான செலவில் இந்த கிட்டுகளை வணிக ரீதியில் சந்தைப்படுத்த முடியும் என்று  கடந்த ஜனவரியில் இதற் கான ஆய்வு தொடங்கப்பட்டு மூன்று மாதங் களில் கிட் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு துணியால் பரிசோதிக்கும் கருவி. இப்போது இருக்கும் எல்லா கொரோனா பிசிஆர் கிட்டுகளைவிட இது செலவு குறை வானது. நாட்டிலேயே ஐசிஎம்ஆர் அங்கீ காரம் பெற்ற கிட்டை உருவாக்கிய முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமை தில்லி ஐஐடிக்கு கிடைத்துள்ளது எனக் கூறி யுள்ளார்.