புதுதில்லி:
நாட்டில் லஞ்சம் குறைந்த மாநிலங்களின் பட்டியலில், கேரள மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக ஊடக ஆய்வு மையம் என்ற அமைப்பு, 20 மாநிலங்களில் தலா 2 மாவட்டங்கள் வீதம் தேர்வு செய்து, ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், கர்நாடகத்தில் 77 சதவிகிதம் பேர் லஞ்சம் தரவேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்று இவர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம் கேரளத்தில் 4 சதவிகிதம் பேர் மட்டுமே, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஒப்பீட்டளவில், வடமாநிலங்களை விட,கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் லஞ்சம் குறைவாக உள்ளதாகவும் ஊடக மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. லஞ்சம் தொடர்பாக, புகார் கொடுப்பதிலும் கேரளா முன்னணியில் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.தமிழகம் போன்ற மாநிலங்களில் லஞ்சம் கொடுத்தால் வேலை நடந்து விடும்; ஆனால், கேரளத்தில் லஞ்சம் கொடுத்தாலும் வேலை நடக்காது என்றும் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.