tamilnadu

திருவனந்தபுரத்தில் எல்டிஎப்க்கு வெற்றி வாய்ப்பு

திருவனந்தபுரம், ஏப்.20-கேரள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் (ஏப்.23) மட்டுமே உள்ளது. இந்நிலையில் குளோபல் லேபர் யுனிவர்சிட்டி நெட்வொர்க் இன் இண்டர்நேசனல் ஸ்டீரிங் கமிட்டி உறுப்பினர் தாமஸ் பிராங்கோ கடும்போட்டி நிலவும் திருவனந்தபுரம் தொகுதியில் தமது குழுவினருடன் ஒரு கருத்து கணிப்பு மேற்கொண்டுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதன் முடிவுகளை அவர் வெளியிட்டார். இந்த கருத்து கணிப்பில் வெளி யிடப்பட்டுள்ள விவரம்: மத்திய அரசின் 5ஆண்டுகால செயல்பாடு குறித்த கேள்விக்கு மோசம் என 80.7 சதவிகிதம் பேர் பதிலளித்துள்ளனர். தற்போதைய அரசு தொடர வேண்டுமா என்கிற கேள்விக்கு 77.1 சதவிகிதம் பேர் வேண்டாம் என பதிலளித்துள்ளனர். கேரள அரசின் செயல்பாடு குறித்தகருத்து தெரிவித்துள்ள வாக்காளர்கள் வளர்ச்சி்த் திட்டங்கள் நன்று என 50.8 சதவிகிதம் பேரும், சுமார் என 36.9 சதவிகிதமும், மோசம் என 12.2சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். சபரிமலை பிரச்சனை யை கையாண்டவிதம் நன்று என 27.7 சதவிகிதம் பேரும், சுமார் என 25.5 சதவிகிதமும், மோசம் என 46.7 சதவிகிதமும் கருத்து தெரிவித்துள்ளனர். சமூக நீதி குறித்தகேள்விக்கு நன்று என 54.5 சதவிகிதம் பேரும், சுமார் என 33.7சதவிகிதமும், மோசம் என 11.8 சதவிகிதமும் கருத்து தெரிவித்துள்ள னர். சுகாதாரத்தில் நன்று என 56.1சதவிகிதத்தினரும், சுமார் என 32.9 சதவிகிதத்தினரும், மோசம் என 11 சதவிகிதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். பொதுக்கல்வியில் நன்று என 60 சதவிகிதமும், சுமார் என 30.8, மோசம் என 9.2 சத விகிதமும், காவல்துறை செயல்பாடு நன்று என 28.9, சுமார் 27.7, மோசம் என 43.4 சதவிகிதமும் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்களிப்பதில் எது செல்வாக்கு செலுத்துகிறது என்கிற கேள்விக்கு அரசியல் என 29.6, வேட்பாளர் என 23.8, வளர்ச்சி என 37.9, இதர விஷயங்கள் என 8.7 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். இது போல் சமூக நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக 87.6 சதவிகி தத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். எல்டிஎப் க்கு வாய்ப்பளிப்பதாக 34.8 சதவிகிதமும், பாஜகவுக்கு 32.3 சதவிகிதமும், யுடிஎப்க்கு 31 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.