புதுதில்லி:
ஜனவரி - மார்ச் காலாண்டில் அனைத்து அரசுத் துறைகளும் தங்களது செலவுகளை25 சதவிகிதம் வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.2019-20 நிதியாண்டில், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக 4.5 சதவிகிதமாகக் குறைந்து போயிருக்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் அரசின் வரி வருவாயும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு மாதமும் வரி வருவாய் குறைவாகவே இருக்கிறது. ரூ. 1 லட்சம் கோடிக்குக் குறையாமல் ஜிஎஸ்டி வசூல் இருக்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்திருந்தாலும் அந்த இலக்கை அடைவது கடினமாகவே இருக்கிறது. இந்நிலையில், வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த நிதியாண்டின், எஞ்சிய (நான்காவது) காலாண்டில் செலவுகளைக் குறைக்க மோடிஅரசு முடிவுசெய்துள்ளது. ஜனவரி - மார்ச்காலாண்டில் அனைத்து அரசுத் துறைகளும், பட்ஜெட் கணக்கீட்டில் தங்களது செலவுகளை 25 சதவிகிதம் வரையில் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.