‘புதிய கல்விக் கொள்கையும் கல்வி உரிமையும்’ குறித்து உரையாற்றிய அருட்பணி பால் மைக்கேல், “இந்தியா பல தேசங்களின் கூட்டமைப்பாக உருவான நாடு. இப்படிப்பட்ட பல நாடுகளில் ஒரேமாதிரியான கல்விக்கொள்கை இல்லாத போது, பல தேசங்களையும் பல பண்பாடுகளையும் கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான கல்விக்கொள்கை ஆழமான சீர்குலைவுகளையே ஏற்படுத்தும்,” என்று எச்சரித்தார்.
பொது அதிகாரப் பட்டியலில் உள்ள கல்வி தொடர்பான கொள்கையை, மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு செயல்படுத்தஇருப்பது, மாநில உரிமைகள் மீதான தாக்குதலாகவும் வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமை புதியகல்விக் கொள்கையில் தங்களது 60சதவீதப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டி ருக்கின்றன என்று கூறுகிறது. அது என்ன பரிந்துரைகள் என்பது ஒருபுறமிருக்க, இது போல் பிற அமைப்புகளின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏன் கேட்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கொடிய காலத்திலும்
கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முகமது, “கொடிய கொரோனா தாக்குதல்காலத்திலும் கூட மத்திய ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சனை களுக்குத் தீர்வு காண்பதற்கு மாறாக,தங்களது அரசியல் நோக்க நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்,” என்றார். மதச்சார்பின்மைக்காகக் குரல் கொடுப்போர் மீது வழக்குகள் புனையப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.கருத்தரங்க நோக்கவுரையாற்றிய பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திசெப்டம்பர் 5 அன்று தமிழகத்தில் 500மையங்களில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்தார்.
சூழ்ச்சிகரமான சூழல்
அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் பற்றிப் பேசிய மூத்த வழக்குரைஞர் வைகை “காஷ்மீரில் நடந்திருப்பது தனி நிகழ்வு அல்ல. நாடு முழுக்கத் திட்டமிட்டு உரு வாக்கப்படும் சூழ்ச்சிகரமான சூழலின் ஒரு பகுதிதான் இது,”என்றார்.அரசின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், மக்களின் அடிப்படை உரிமைகள் இந்த மூன்றும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள். அதற்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களில், கலாச்சாரஅடையாளங்கள் பறிக்கப்படு கின்றன. கலாச்சார அடையாளத்தை பறித்துவிட்டு மதத்தைப் பின்பற்றஉரிமை என்பதில் என்ன பொருளிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். மத அடிப்படையிலான குடியுரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அஸ்திவாரத்தையே தகர்க்கிற சதி என்றும் அவர் குறிப்பிட்டார்.‘சிறுபான்மையினரும் அரசமைப்புச் சட்டமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்’ ச.செந்தில்நாதன், “அடிப்படை உரிமைகளாகச் சொல்லாமல், வழிகாட்டு நெறிகளில் சொல்லப்பட்டுள்ள சில அம்சங்களைப் பயன்படுத்தி, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை எடுக்க வழி இருக்கிறது,” என்று கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக, பசுவதை தடுப்பு என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பல மாநிலங்களில் சட்டம் இருப்பது பற்றியும், அதைத் தவறான முறையில் பயன்படுத்திக் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுவது பற்றியும் விளக்கினார். அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய மோசமான அம்சங்களைக் கூட, நல்ல ஆட்சியாளர்களால் சரியான முறையில் கையாளவும் மக்களுக்கு நன்மை செய்யவும் முடியும். மோசமான ஆட்சியாளர்கள் நல்ல அம்சங்களைக் கூட மக்களின் உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். ஆகவே அரசமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடைய விரிவாக ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
===தொகுப்பு: அ. குமரேசன்===