புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன்? என்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி இடம் பெற்றிருந்தது. பின்னர், திடீரென அந்த செய்திக் குறிப்பு நீக்கப்பட்டு, 4 மணி அல்ல, 8 மணிக்குத்தான் மோடிஉரையாற்றுவார் என்று நேரமாற்றம் செய்யப்பட்டது.அதன்படி, பிரதமர் மோடி வியாழக்கிழமையன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். வழக்கம் போல, கல்வி, வேலைவாய்ப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்களில் காஷ்மீர் பின்தங்கி இருப்பதாகவும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளதன் மூலம் காஷ்மீர் சொர்க்கம் ஆகப் போகிறது என்றும் ஏற்கெனவே பாஜக தலை வர்கள் பாடிவரும் அதே பல்லவியை மோடியும் பாடினார்.மோடி பேச்சில், புதிதாக இடம்பெற்றுள்ள விஷயமென்றால், இனிமேல் “காஷ்மீரில் படப் பிடிப்பு நடத்தலாம்” என்று கூறியதுதான் ஆகும். இதுவும்கூட உண்மை யில்லை. ஏற்கெனவே காஷ்மீரில் படப்பிடிப்புக்கள் நடக்கவே செய்தன.எனினும், சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்காகவே ‘370’ ரத்து செய்யப்பட்டிருப்பது போல, “தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படத்துறையினருக்கு என் வேண்டுகோள். இனி எந்தத் தடையும் இன்றி காஷ்மீருக்கு வந்து நீங்கள் படப்பிடிப்பை மேற்கொள்ளுங்கள். இதனால் இங்குள்ள இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். வருங்காலத்தில் ஹாலிவுட் படங்கள் கூட காஷ்மீரில் எடுக்கப்படும் என்பதால் சுற்றுலாத்துறை பெரு வளர்ச்சி அடையும்” என்று மோடி கூறியுள்ளார்.