கோலார்:
கர்நாடக மாநில பாஜக அரசில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர், மதுசாமி. இவர், கோலார் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்றுள்ளார்.
அப்போது கர்நாடக ரைதா சங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், “இந்த ஊர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அகற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அமைச்சர் மதுசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த கோரிக்கையையும் கேட்ட மதுசாமி புகார் கூறிய பெண்ணை, “வாயை மூடுராஸ்கல்’’ என்று கோபமாக திட்டி விரட்டி யுள்ளார்.இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர், அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிடவே அமைச்சர் மதுசாமி பெண் தொழிலாளியிடம் அராஜகமாக நடந்து கொண்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பெண்ணை அவதூறாகப் பேசிய மதுசாமியை அமைச்சர் பதவியில் இருந்து ‘டிஸ்மிஸ்’’ செய்ய வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.இதையடுத்து, “நான் அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது. தப்பு தான்” என்று மதுசாமி தற்போது பின்வாங்கியுள்ளார்.