புதுதில்லி:
காரைக்கால் - இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.புதுச்சேரியில் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காரைக்கால் - இலங்கைஇடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துதிட்டத்தை செயல்படுத்த தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் மத்திய, மாநில அரசுகள் ஆதரவோடு செயல்படுத்தப்படும் என்றார். புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கப்பல் பயணத்தின்மூலம் இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம் என்று தெரிவித்தார்.