tamilnadu

img

கண்ணன் கோபிநாத்தின் ராஜினாமா ஏற்க மறுப்பு உடனே பணியில் சேர உத்தரவு

 டாமன், ஆக.29- சொந்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா குறித்து முடிவெடுக்கும் வரை பணியில் தொடருமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  மத்திய அரசின் நேரடி ஆட்சியில் உள்ள டாமன் டையு, நாகர் ஹவேலி ஆகிய இடங்களில் மின்சாரம் மற்றும் எரிசக்திதுறை செயலாளராக பணியாற்றியவர் கண்ணன் கோபிநாத். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் சொந்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை எனக்கூறி ஆகஸ்ட் 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பினார்.  ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டபிறகே ராஜினாமா அமலுக்கு வரும் என சில்வாசாவில் அவர் வசித்த விருந்தினர் மாளிகையின் வாயிலில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. டாமன் டையு அரசு நிர்வாகம் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திற்கு பதிலளிக்க கண்ணன் கோபிநாத் இதுவரை முன்வரவில்லை.