புதுதில்லி:
பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு தில்லியில்நடைபெற்ற வன்முறைக் கலகங்கள் தொடர் பான வழக்குகள் தில்லிக் காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கையாளப்பட்டு வருகிறது. அவற்றை விசாரித்து வரும் தில்லி கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, வழக்கினை ஒட்டுமொத்தமாகக் கண்காணித்து, நியாயமான புலனாய்வை உத்தரவாதம் செய்யுமாறு,சிறப்புப் பிரிவு காவல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதன் அன்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் மீது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் பல வழக்குகள் வடகிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை தொடர்பானவை. அந்தப்பகுதி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டவை. அப்போது கர்கார்டூமா நீதிமன்றங்களால்விசாரிக்கப்பட்டவை. அவை இப்போது சிறப்புபிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தில்லி, பட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கும் மாற்றப்பட்டிருக்கிறது.
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர், அசிஃப் இக்பால் தன்ஹா வழக்கில் 30 நாட்கள் காவல் அடைப்பு கோரியதற்கு எதிராக விசாரணை நடைபெற்றபோது, கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணாகாவல்துறையினரின் புலனாய்வு தொடர்பாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். “வழக்கின் நாட்குறிப்பைப் பார்வையிட்டதிலிருந்து ஒரு சங்கடமான உண்மை வெளிப்படுகிறது. விசாரணை ஒருதரப்பை மட்டுமே குறியாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. காவல் ஆய்வாளர்கள் லோகேஷ் மற்றும் அனில் ஆகியோரை விசாரித்தபோது, அவர்கள் இருவரும்இருதரப்பினர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக இதுவரை என்ன விசாரணை மேற்கொண் டிருந்தீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்,” என்று நீதிபதி கூறியிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து நீதிபதி ராணா இவ்வழக்கு சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையர் வழக்கினை மேற்பார்வைசெய்து, நியாயமான புலனாய்வை உத்தரவாதம் செய்திட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.இது தொடர்பாக தன்ஹாவின் வழக்குரைஞர், நீதிபதியின் இக்கூற்றுகள் மிகவும் முக்கியத்துவம் உடையவை என்றார். தன்ஹா, தில்லிக் காவல்துறையினரால் சென்ற வாரம் கைது செய்யப்பட்டார். இந்தவழக்கில் முதல் கைது இதுதான். இவரை கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர். (சம்பவம் நடந்தது பிப்ரவரியில். ஆனால் இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது மார்ச் மாதத்தில் தான்.)மேலும் வழக்குரைஞரும் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருமான இஸ்ரத் ஜஹான் மற்றும் செயற்பாட்டாளர் காலித் சைஃபி முதலானவர்களும் இவ்வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குரேஷியின் குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டத்திலிருந்தவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்தபோது அவர்களை அவ்வாறு கைது செய்யாது தடுத்தவர்களாவார்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள் அனைவருமே, விசாரணை ஒருதலைப்பட்சமாக, அதிலும் குறிப்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய முஸ்லிம்களுக்குஎதிராக, நியாயமற்ற முறையில் மேற்கொள் ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.மேலும் வடகிழக்கு தில்லியில் வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டிவிட்ட பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மாமற்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்அனுராக் தாகூர் ஆகியோர் குற்றப்பொறுப்புகள் குறித்து இதுவரை விசாரணை எதுவுமே நடத்தப்படவில்லையே, ஏன் என்றும் அவர்கள்கேள்வி எழுப்பினார்கள். (ந.நி.)