புதுதில்லி,ஏப்.7-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையங்களில் இருந்து சமூக பரவல் ஏற்படுவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாட்டில் புதிதாக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ள போதிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம் என்றார்.
இவரது கருத்தை ஆமோதித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர், தாங்கள் அளித்து வரும் விளக்கங்களுக்கும், எய்ம்ஸ் இயக்குநரின் கருத்துக்கும் வேறுபாடு இல்லை. தொற்று எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிய முடியாத மூன்றாவது கட்டத்தை எட்டிவிடக் கூடாது என்பதை நோக்கியே அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.