tamilnadu

img

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் வீடுகளில் சோதனை

புதுதில்லி,ஆக.24- அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல்  தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். நடத்தினர். ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியால், கடந்த ஏப்ரல் மாதம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அதன் நிறுவனர் நரேஷ் கோயல், தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது, திவால் சட்டத்தின்கீழ் தீர்வு பெறுவதற்கான நடவடிக்கையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பெருமளவிலான முறைகேடுகள், நிதியை வேறு பணிக்கு திருப்பி விடுதல் போன்றவைதான் நிறுவனத்தின் திவால் நிலைக்கு காரணம் என்று மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல் குற்றம் தொடர்பாக, கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கத்தில், மும்பை, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.