tamilnadu

img

சில்லரை வர்த்தக  பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரிப்பு!

புதுதில்லி:
நாட்டில் கடந்த மே மாதத்தில் பணவீக்க விகிதம் எந்த அளவிற்கு இருந்தது என்பது பற்றிய ஆய்வு அறிக்கை, தற்போது வெளியாகி உள்ளது.இதன்படி கடந்த 7 மாதத்தில் இல்லாத அளவிற்கு சில்லரை வர்த்தக பொருட்களின் பண வீக்க விகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதம், 2.99 சதவிகிதமாக இருந்த பணவீக்க விகிதம், தற்போது 3.05 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. 

குறிப்பாக, உணவு மற்றும் பானங்களின் பண வீக்க விகிதம் 1.38 சதவிகிதத்திலிருந்து 2.03 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே மாதம் தேர்தல் காலம் என்பதால் அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதும், காய்கறிகளின் விலை அதிகரித்ததும், பணவீக்கத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், இந்த பண வீக்கத்தின் தாக்கம் இன்னும் 3 மாதம் வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.