tamilnadu

img

பறிபோகும் 10 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு

புதுதில்லி:
இந்தியாவின் மிக முக்கியத் தொழிற்துறைகளில் ஒன்று, ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் துறை. உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, மொத்த விற்பனை, சில்லரை விற்பனை எனப்பல வகையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 லட்ச பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாகும். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த துறையாகவும் இதுவே இருந்தது. ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் மதிப்பு, கடந்த 2017-ஆம் ஆண்டு வரைவேகமான வளர்ச்சியையே கொண்டிருந்தன. டிசம்பர் 2017 வரை வளர்முகத்திலேயே இருந்தன.ஆனால், நரேந்திர மோடியின் கடந்த2 ஆண்டு கால ஆட்சியில், இந்திய ஆட்டோமொபைல் தொழிற்துறை கடும்வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2018 ஜனவரி முதல் குறையத் தொடங்கிய வளர்ச்சி, இந்த 16 மாதங்களில், கடும் வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமே, மோடி அரசுதிட்டமிட்டுள்ள ‘எலெக்ட்ரிக் வாகனக்கொள்கை’தான் என்று கூறப்படுகிறது.அதாவது, 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. புதிய முதலீடுகள் அதை நோக்கியே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே பெருவாரியாக முதலீடு செய்து, உற்பத்தியில் தீவிரமாக இருக்கும்போது, திடீரென எலெக்ட்ரிக் வானங்கள் தயாரிப்பில் முதலீடு செய் வது சிரமம் என்று நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக்வாகனங்களையே பயன்படுத்த முடியும் என்பதால், பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான ஆர்வமும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்து விட்டது. இது
சந்தையில் வாகனங்களுக்கான தேவையையும் குறைத்து விட்டது. முதலீட்டாளர்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முதலீடு செய்யவே அஞ்சும் நிலைஏற்பட்டுள்ளது.பயணிகள் வாகனங்களைப் பொறுத்தவரை, முன்னணி நிறுவனங்களான சுசுகி, மகிந்திரா அண்ட் மகிந்திராநிறுவன பங்குகளே சுமார் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆட்டோ மொபைல் துறையில், கடந்த 2019 மே வரையிலான 16 மாதங்களில் 42 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 905 கோடியாகும். அதாவது, ஆட்டோமொபைல் துறைக்கு,எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவு தற்போது ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் மட்டும் பயணிகள் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 18.4 சதவிகிதம் குறைந்துள்ளது. ஜூன்மாத விற்பனை அளவு மட்டும், சுமார் 18 வருடங்களில் இல்லாத சரிவைச் சந்தித்து, மொத்த ஆட்டோமொபைல் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த வர்த்தகச் சரிவின் காரணமாக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை பெருமளவில் குறைக்க முடிவு செய்து, கதவடைப்பு செய்து வருகின்றன. இதன் எதிரொலியால் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாகி இருக்கிறது.விளைவு, ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார்10 லட்சம் பேர் உடனடியாக வேலையிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள் ளனர்.இந்திய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு(Automotive Component Manufacturers Association of India-ACMA) தலைவர் ராம் வெங்கட்ரமணி, “ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, இந்த துறையோடு முடிந்துபோகாது; நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்தைப் பாதிக்கும்” என்று எச்சரிக்கிறார்.

“எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை மீது அரசுக்குத் தெளிவான புரிதல்இல்லாத காரணத்தால் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு முற்றிலும் முடங்கியுள்ளது” என்ற குற்றச்சாட்டையும் வெங்கட்ரமணி முன்வைத்துள்ளார்.மேலும், “ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் நாட்டில் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடம்இல்லாமல் போகும். ஆட்டோமொபைல் துறையில் இந்த மோசமான நிலையை உடனடியாகச் சரி செய்ய ஒரே வழி, வாகனங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மிகப்பெரிய அளவிற்கு குறைப்பதுதான்” எனவும் ராம் வெங்கட்ரமணி கூறியுள்ளார்.