புதுதில்லி:
2020, ஜூன் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி மதிப்பீட்டு (Estimates of Index of Industrial Production - IIP)விவரங்களை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் செவ்வாயன்று (ஆகஸ்ட் 11) மாலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஜூன் மாதத்திற்கான இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி(IIP) 16.6 சதவிகிதம் வீழ்ச்சி காணலாம்என்று தெரிவித்துள்ளது. இது ஒருவிரைவு மதிப்பீடு (Quick Estimate) தான்எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.சுரங்கத் தொழில், கடந்த 2019 ஜூன்மாதத்துடன் ஒப்பிடும்போது, 2020 ஜூனில் 19.8 சதவிகித வீழ்ச்சி காணலாம். இதேபோல உற்பத்தித் துறை 17.1 சதவிகிதம், மின்சாரத் துறை 10 சதவிகிதம், முதன்மை பொருட்கள் துறையின் உற்பத்தி 14.6 சதவிகிதம், மூலதனபொருட்கள் உற்பத்தி 36.9 சதவிகிதம் என்ற அளவில் வீழ்ச்சி காணலாம் எனமதிப்பிட்டுள்ளது.மேலும், இடைநிலை பொருட்கள் துறை 25.1 சதவிகிதம், கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்துறை 21.3 சதவிகிதம், நுகர்வோர் சாதனங்கள் துறை 35.5 சதவிகிதம் வீழ்ச்சி காணலாம் என்று கூறியுள்ளது. நுகர்வோர் சாதனங்கள் அல் லாத பொருட்கள் துறை மட்டும் 14.0 சதவிகிதம் வளர்ச்சி காணலாம் என நம் பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.