புதுதில்லி:
2019 - 20 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 5.3 சதவிகிதமாக ‘மூடிஸ்’ நிறுவனம் குறைத்துள்ளது. முன்பு,5.4 சதவிகிதமாக ஜிடிபி-யை மதிப்பிட்டிருந்த மூடிஸ், தற்போது ஒரு புள்ளியைக் குறைத்துள்ளது.இதே போல் ‘ஜி20’ நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகளையும் மூடிஸ் 2.1 சதவிகிதமாக திருத்தியுள்ளது. சீனாவின் வளர்ச்சி கணிப்பினை 4.8 சதவிகிதமாக குறைத்துள்ளது. முன்பு இதனை 5.2 சதவிகிதம் என்று மூடிஸ் கணித்திருந்தது.அமெரிக்காவைப் பொறுத்தவரையில் 1.5 சதவிகித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக மூடிஸ் கூறியுள்ளது. இதனை முன்பு1.7 சதவிகிதமாக மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சர்வதேச அளவில், பொருளாதார மந்தநிலை வாட்டி வதைத்து வரும் நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதாரத்தை மேலும் ஆட்டம் காண வைத்துள்ளது.இதனைக் கணக்கில் கொண்டே ஜிடிபி கணிப்பை மூடிஸ் குறைத்துள்ளது.