புதுதில்லி, ஏப். 20 - உலக அளவில், பத்திரிகை சுதந்திரம் நிலவும் நாடுகளின் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. பாரீஸில் உள்ள ‘எல்லையற்றசெய்தியாளர்கள்’ எனும் சுயேச்சையான அமைப்பு, உலக நாடுகளின் நிலைமையை ஆய்வு செய்து, ஆண்டுதோறும் இப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையிலேயே 2019-ஆம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.மொத்தம் 180 நாடுகள்பட்டியலில் வரிசைப்படுத்தப் பட்டு உள்ள நிலையில், இந்தியா படுமோசமான வகையில் 140-ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 138-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது மேலும் 2 இடங்கள் கீழிறங்கி உள்ளது.இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி, பத்திரிகையாளர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், காவல்துறையினர், நக்சலைட்டுகள் மற்றும் ஊழல்அரசியல்வாதிகளின் தாக்கு தல்கள் அதிகரித்துள்ளன.குறிப்பாக, மத்தியில் ஆளும்பாஜக-வினர், பத்திரிகையாளர்களை வெளிப்படை யாகவே மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவற்றின் காரணமாகவே, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மோசமான நிலைக்கு போயிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.பத்திரிகை சுதந்திரம் நிலவும் நாடுகளின் பட்டியலில், நார்வே தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த பின்லாந்து, நடப்பாண்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்தில் இருந்த நெதர்லாந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.