tamilnadu

img

சக்ர வியூகத்தில் சிக்கி நிற்கும் இந்தியப் பொருளாதாரம்... நாட்டின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சொல்கிறார்

புதுதில்லி:
இந்திய பொருளாதாரம் ஒரு சக்ரவியூகத்தில் சிக்கி இருக்கிறது என்றுநாட்டின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

மோடியின் ஆட்சியில், கடந்த6 ஆண்டுகளாகவே, இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக் கிச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டிஅமலாக்கத்திற்குப் பிறகு இது மேலும் மோசமானது. இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ‘நோபல்’ பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள் அமர்த்தியா சென்,அபிஜித் பானர்ஜி, ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் எனபலரும் இதுதொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர்.இந்நிலையில், புதன்கிழமையன்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) கூட்டத்தில் பேசிய இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியனும், “இந்திய பொருளாதாரம் ஒருசக்ர வியூகத்தில் சிக்கி இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

“கடந்த சில ஆண்டுகளில், வங்கிஉயர் அதிகாரிகள் எடுத்த தவறான முடிவுகளால்தான் இன்று இந்நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று ஒருபுறம் பழியைத் தூக்கி அதிகாரிகள் மீதுஅவர் போட்டிருந்தாலும், பொருளாதாரம் பிரச்சனையில் இருப்பதைமறுக்க முடியாமல் ஒப்புக் கொண் டுள்ளார்.“இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு பெரிய காரணம்வங்கித்துறை தான். வங்கிகளில் இருக்கும் செயல்படாத கடன்கள்(NPA) பிரச்சனை; வங்கிகள் துணிந்துகடன் கொடுக்காமல் இருந்தது; கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன்கொடுக்காமல் இருந்தது போன்றவைகளால் முதலீடுகள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலீடுகள் போதிய அளவுக்கு வராதது, பொருளாதார வளர்ச்சியிலும் எதிரொலித்துஇருக்கிறது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சி பெரிதாக இல்லைஎன்பதால் நுகர்வு சரிந்து இருக்கிறது. நுகர்வு சரிவதால், முதலீடுகளும் சரிந்து இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“இன்று உலகின் ‘டாப் 100’வங்கிகளைப் பட்டியல் போட்டால்அதில் ஒரே ஒரு இந்திய வங்கிதான்இடம் பிடித்து இருக்கிறது. ஆனால்,‘டாப் 100’ வங்கிகளில் 18 சீன வங்கிகள் இடம் பிடித்து இருக்கின்றன. 12 அமெரிக்க வங்கிகள் இடம் பிடித்துஇருக்கின்றன. அவ்வளவு ஏன்சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், சிங்கப்பூர்போன்ற குட்டி நாடுகளின் வங்கிகள் கூட நல்ல இடத்தில் இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன், வங்கிகள் இணைப்புக்கு சாதகமாக, “இந்தியாவங்கிகளை பெரிதாக வளர்த்து எடுக்க வேண்டும்; ஒரு நாட்டின் வங்கித் துறையில், பெரிய வங்கிகள் இருந்தால்தான், எந்த ஒரு பெரிய பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.“வங்கித் துறை, நிறைய வியாபாரம் செய்வதிலும் (Scale) அல்லதுதரமாக வியாபாரம் (Quality) செய்வதிலும் அடி வாங்குகிறது. நிறைய வியாபாரம் செய்ய வேண்டும், அதே நேரத்தில் தரமாகவும் வியாபாரம் செய்ய வேண்டும்” என அறிவுரையையும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் வழங்கியுள்ளார்.