புதுதில்லி:
இந்தியா, அமெரிக்க நாட்டிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பொருட்களின் மதிப்பு 2019 - 20 நிதியாண்டில், சுமார் 42 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இறக்குமதி பொருட் களின் மதிப்பு, நடப்பாண்டில் 10 பில்லியன்டாலரை (சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய்)தாண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியா தனது எரிசக்தித் தேவைக்கு ‘ஒபெக்’ நாடுகள் கூட்டமைப்பின் மேற்கு ஆசிய நாடுகளையே பெருமளவில் (65 சதவிகிதம்) சார்ந்திருந்தது. தற்போது, அந்நிலையை மாற்றிக் கொண்டுள்ள இந்தியா, தனது தேவைக்கு பெருமளவு அமெரிக்காவைச் சார்ந்திருக்க முடிவு செய்துள்ளது.கடந்த 2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 29 வரை, அமெரிக்காவிலிருந்து 260 கோடிடன் அளவிற்கே இந்தியா கச்சா எண் ணெய்யை இறக்குமதி செய்திருந்தது. அதுவே 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 29 வரையிலான காலத்தில், 450 கோடி டன் அளவாக உயர்ந்தது. இது 72 சதவிகித அதிகரிப்பாகும்.இதனிடையே, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். 2018-19ஆம் ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து 7.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றையே இந்தியாஇறக்குமதி செய்திருந்தது. தற்போது அதில் 2.8 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என்று அமைச்சர் மதிப்பிட்டுள்ளார்.அமெரிக்க இறக்குமதி அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு புதிய உயரத்தை அடைந்துள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பில்தான் அந்தந்த நாட்டு அமைச்சர்கள் மகிழ்ச்சிஅடைவார்கள். மாறாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை அதிகரித்து இருப்பதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய் யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மிக அதிகமான வரிகளை தனது நாட்டில் விதித்தது. பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் கூடுதல் வரிவிதித்தது. இதனை எதிர்பார்க்காத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆத்திரத்தின் உச்சிக்கேபோய்விட்டார். நாங்கள் வரி போடலாம்; பதிலுக்கு, இந்தியா எவ்வாறு வரியை உயர்த்தலாம் என்று கொதிப்படைந்த டிரம்ப், வரியைக் குறைக்குமாறு பகிரங்கமாக இந்தியாவை மிரட்டினார். ஒருகட்டத்தில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய ஏதுவான நாடுகளுக்கான பட்டியலிலிருந்து இந்தியாவையே அடியோடு நீக்கினார்.மோடி அரசு ஆடிப்போனது. 2016-ஆம்ஆண்டு, புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைஅமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொண் டது. அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பதும் அதன் அம்சங்களில் ஒன்றாகும். அமெரிக்காவை சமாதானப்படுத்தும் வகையிலான இந்த இறக்குமதி அதிகரிப்பைத்தான் அமைச்சர்தர்மேந்திர பிரதான் பெருமையாகப் பேசியுள்ளார்.