புதுதில்லி:
இந்தியாவில் வருகின்ற கோடைக்காலத்தில் வெப்ப அளவானது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக இருக்கும் என்றுஇந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலையானது இயல்பான அளவை விடஅதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், மார்ச், ஏப்ரல், மேமாதங்களில் இந்தியாவின் வடமேற்கு, மேற்கு, மத்திய பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கமான அளவை விட சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.