முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை!
புதுதில்லி, மார்ச் 6 - இந்திய நாடானது, சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஆகிய மூன்று மிகப்பெரிய உடனடி ஆபத்துக் களை எதிர்க்கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் இதுதொடர்பான கட்டுரை ஒன்றை டாக்டர் மன்மோகன் சிங் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் தற்போது ‘கடுமையான மற்றும் மோசமான’ நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை நான் மிகவும் கனமான இதயத்தோடு எழுதுகிறேன்...
சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்த நிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடி யாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த அபாயகரமான ‘சமூக ஒற்றுமை யின்மை- பொருளாதார மந்தநிலை- கொரோனா வைரஸ்’ ஆகிய கலவையான மூன்று பிரச்சனை கள் இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பது மட்டுமல்லாமல், உலகில் ஒரு பொருளாதார மற்றும் ஜனநாயக சக்தியாக இருக்கும் இந்தியா வின் உலகளாவிய மரியாதையைக் குறைக்கக் கூடும் என்று நான் ஆழ்ந்த கவலைப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி ‘வெறுமனே சொற்களால்’ அல்லாமல், செயல்களால் இந்த தேசத்தை சமாதானப்படுத்த வேண்டும். ‘நாம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை பிரதமர் மோடி நிச்சயம் அறிவார் என்பதால் அவரால் முடிந்தவரை சுமூகமாக உதவ முடியும்’ என்ற நம்பிக்கையை இந்த தேசத்திற்கு- மக்களுக்கு அவர் ஏற்படுத்த வேண்டும்.
தில்லியில் ‘அரசியல் வர்க்கம் உட்பட நமது சமூகத்தின் கட்டுக்கடங்காத பிரிவினரால்’ வகுப்புவாத பதற்றங்கள் தூண்டப்பட்டு, மத சகிப்பின்மை தீப்பிழம்பாக வெடித்தது. சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பற்ற வேண்டிய அரசின் நிறுவனங்கள், குடிமக்களை காப்பாற்றாமல் தங்கள் தர்மத்தை கைவிட்டன. நீதி மற்றும் ஊடக நிறுவனங்களும் தங்கள் கடமையில் இருந்து தவறிவிட்டன. கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல், சமூகப் பதற்றங்களின் நெருப்பு, நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் நமது தேசத்தின் ஆன்மாவையும் பற்றிக் கொள்ளும் அச்சுறுத்தலை தருகின்றன. பற்றவைத்த நபர் களால் மட்டுமே அதை அணைக்க முடியும். சில ஆண்டுகள் முன்பு வரை உலக அளவில் பொருளாதார வளர்ச்சி நிறைந்த நாடுகளின் முன்மாதிரியாக இருந்த இந்தியா, தற்போதைய அரசின் தவறான செயல்களால் மோசமாக சரிந்து வருகிறது. பொருளாதார ஒற்றுமையின் அடிப் பகுதியான சமூக நல்லிணக்கம் இப்போது ஆபத்தில் உள்ளது. நம்முடைய சுற்றுப்புறத்தில் திடீர் வன்முறை வெடிக்கும் அபாயம் இருக்கும் போது, வரி விகிதங்களை மாற்றியமைத்தல், கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கத்தொகைகளை பொழிவது அல்லது தள்ளுபடி செய்வது ஆகியவை இந்திய அல்லது வெளிநாட்டு நிறு வனங்களை முதலீடு செய்யத் தூண்டாது.
நாட்டில் தற்போதைய பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் எனில் முதலில், கொரோனா வைரஸ் (COVID-19) அச்சுறுத்தலைக் கட்டுப் படுத்துவதில் அனைத்து ஆற்றல்களையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்த வேண்டும், இதன் மூலம் நச்சு சமூகச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும். மூன்றா வதாக நுகர்வு கிராக்கியை அதிகரிப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் ஒரு விரிவான மற்றும் துல்லியமான நிதி ஊக்கத் திட்டத்தை ஒன்றிணைக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் மன்மோகன் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.