tamilnadu

img

இந்தியா: டிக்டாக் செயலியிலிருந்து 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்

டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள டிக்டாக் பாதுகாப்பு மையம் தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பத்து மொழிகளில் வீடியோக்களை மதிப்பிடும் பணியைச் செய்து வருகிறது.இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லட்சக்கணக்கான டிக்டாக் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கடந்த ஜூலை மாதம் முதல் நடிவடிக்கை எடுத்துவருவதாகவும் இதன் ஒரு பகுதியாக இதுவரை 60 லட்சம் வீடியோக்களுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளது.

இனி டிக்டாக்கில் புதிய கணக்கு தொடங்குபவர் 13 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும் என்ற புதிய விதியையும் கொண்டுவந்திருக்கிறது. 13 வயதானால்தான் புதுக்கணக்கு ஆரம்பிக்க முடியும். பெறப்படும் வயது உள்ளிட்ட தகவல்களை வெளியிடாமல் பாதுகாப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.