புதுதில்லி:
கோவிட் -19 வைரஸ் சீனாவில் மட்டுமன்றி, இந்தியா உட்பட உலகின் பிறபகுதிகளிலும் வேகமாக பரவி வரும்நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், மறுபுறத்தில்ஏற்றுமதி - இறக்குமதி வணிகம் உள் ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கத்தை செலுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், வெளிநாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைகளின் ஏற்றுமதி வரும் மாதங்களில் 40 சதவிகிதம் வரை குறைய வாய்ப் புள்ளதாக பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (Texprocil) தலைவர் கே.வி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.“தற்போதைய மதிப்பீடுகளின்படி, நிலைமை மேம்படவில்லை என்றால்,இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி எதிர்வரும் மாதங்களில் 40 சதவிகிதத் திற்கும் மேலாக குறையும்” என்று அவர்கூறியுள்ளார்.
“இந்த நெருக்கடியான சூழலில், ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு நிதிநிவாரணம் வழங்குவதற்கான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்; ஆதரவை விரிவுபடுத்தும் வகையில், பருத்தி நூல் மற்றும் துணிகளுக்கு விதிக்கப்படும் மாநில மற்றும் மத்திய வரிகள் தள்ளுபடிக்கான திட்டத்தை (ROSCTL) நீட்டிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ள கே.வி. சீனிவாசன், “3 சதவிகித வட்டியிலான கடன்களையும்கூட மார்ச் 31-க்குப் பின்னரும் நீட்டிப்பு செய்ய வேண்டிய தேவைஉள்ளது என்று தெரிவித்துள்ளார்.“பீதி சூழ்நிலை காரணமாக ஜவுளிப்பொருட்களுக்கான தேவை மற்றும் உள்நாட்டு விற்பனை குறைந்து வருகிறது என்று இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பின் (CITI) தலைவர் ராஜ்குமாரும் சுட்டிக்காட்டியுள்ளார்.