புதுதில்லி:
2016-ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டுவந்த பிரதமர் மோடி,இதன்மூலம் தீவிரவாதம், கள்ளநோட்டு பரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத காரியங்கள் தடுக்கப்படும் என்று கூறினார்.ஆனால், கறுப்புப் பணம், கள்ளநோட்டு எவ்வாறு ஒழியவில்லையோ, அதுபோல சட்ட விரோத கடத்தல் நடவடிக்கைகளும் குறையவில்லை. மாறாக, சமீப காலமாக போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து இருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் வழியாகவும், எல்லையோர பகுதிகளிலிருந்தும்தான் இந்த கடத்தல்கள் அதிகம் நடப்பதும் தெரியவந்துள்ளது.
எனது ஆட்சியை கவிழ்த்ததே போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பாஜக மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதை உறுதிப் படுத்தும் வகையில், பாலிவுட் நடிகர்சுஷாந்த் சிங் மரணத்தில் துவங்கிதற்போது கர்நாடகத்தில் 3 நடிகைகள் உட்பட பலர் போதைப்பொருள்விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர். இது நடந்துகொண்டிருந்த போதே கல்புர்கி மாவட்டத்திலுள்ள கால்கி பகுதியில், 1,350 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தலைநகர் தில்லியிலும் ரூ. 90 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் வழியே இந்த போதைப் பொருள்கடத்தி வரப்பட்டதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச கடத்தல்காரர்கள் என்று கூறப் படும் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.