புதுதில்லி:
சுவிட்சர்லாந்து அரசின் கெடுபிடியால் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்திய கறுப்புப்பண முதலைகள் தங்கள் பணத்தை எடுத்து தென்கொரியாவில் வங்கிகள் அல்லாத துறைகளிலும், பிற வைப்புகளாகவும் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக சர்வதேச வங்கித் தரவுகள் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளன.குறிப்பாக இந்தியர்கள் தான் கடந்த 2018ஆம் ஆண்டில்சுமார் 900 சதவிகிதம் வரை கறுப்புப்பணத்தை தென் கொரியாவில் முதலீடு செய்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் சுமார் ரூ.45 ஆயிரத்து 940 கோடியாக இருந்து முதலீடு, ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து கடந்த 2018-ஆம் ஆண்டு வாக்கில் சுமார்ரூ. 65 ஆயிரத்து 140 கோடியாக கூடியது என்றும் அந்த புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.