புதுதில்லி:
பணமதிப்பு நீக்கத்திற்குப் பிந்தைய, கடந்த 3 ஆண்டுகளில், சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கான கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு, திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ளப்பணம், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று கூறிய அவர், புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் வெளி யிட்டார். இந்த புதிய நோட்டுக் கள் நவீன தொழில்நுட்பத்து டன் அச்சிடப்பட்டு இருப்பதால், இதைப்போல கள்ளநோட்டுக் களை உருவாக்க முடியாது என்றும் அப்போது கூறப்பட்டது.
ஆனால், தீவிரவாதமும் ஒழியவில்லை; கறுப்புப் பணமும்பிடிபடவில்லை. இந்நிலை யில்தான் கள்ளநோட்டு அச்சடிப்பும் தடுக்கப்படவில்லை என் பது, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தாக்கல்செய்த அறிக்கை மூலமே தெரியவந்துள்ளது.தேசிய குற்றப்பதிவு அலுவலகத்தின் (NCRB) தரவுகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப் பட்டுள்ள அந்த அறிக்கையில், “பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் மட்டும், 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 20 ஆயிரத்து 68 என்ற எண்ணிக்கையிலும், 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 13 ஆயிரத்து 513 என்ற எண்ணி க்கையிலும், 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 2 ஆயிரத்து 233 என்ற எண்ணிக்கையிலும், 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 10 ஆயிரத்து 662 என்ற எண்ணிக்கையிலும் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய 2015-ஆம் ஆண்டில், ரூ. 15 கோடியே 48 லட்சம் அளவிற்கே கள்ளநோட்டுக்கள் பிடிபட்டிருந்த நிலையில், பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு,கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ. 28 கோடியே 10 லட்சம் அளவிற்கான கள்ள நோட்டுக்களும், 2018-ஆம் ஆண்டு ரூ. 17 கோடியே 75 லட்சம்அளவிற்கான கள்ள நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கள்ளநோட்டு புழக்கம் தொடர்பாக, அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 54 வழக்குகள், குஜராத்தில் 42 வழக்குகள், உத்தரப்பிரதேசத்தில் 34 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் இடம்பெற்று ள்ளது.