புதுதில்லி:
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி,தன் நாட்டின் வான்வெளி வழியாகப் பறப்பதற்கு பாகிஸ் தான் அரசு அனுமதி அளித்துள்ளது.கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டம் ஜூன் 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கு, பாகிஸ்தான் நாட்டின் வான் வெளி வழியாகவே செல்ல வேண்டும்.
ஆனால், பிப்ரவரி 26 பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு, பாகிஸ்தான் தடை விதித்துள்ளதால், பிரதமர் மோடியின் பயணத்திற்கு சிக்கல் ஏற்பட்டது.பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தாமலேயே செல்லலாம் என்றாலும் 4 மணிநேரம் கூடுதல் அலைச்சல் ஏற்படும்.எனவே, இந்தியப் பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளியைப் பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு, அந்நாட்டு அரசிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதனை பாகிஸ்தான் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய அரசின் வேண்டுகோளைக் கொள்கை அளவில் ஏற்று, நரேந்திர மோடி விமானம், பாகிஸ்தான் வான்வெளியை பயன் படுத்திக் கொள்ள, தங்கள் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் அனுமதி வழங்கி இருப்பதாக, பாகிஸ்தான்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்குமுன்பு சுஷ்மா ஸ்வராஜ், பிஷ்கெக் செல்வதற்கும் பாகிஸ்தான் அனுமதிவழங்கியிருந்தது, குறிப்பிடத்தக்கதாகும்.