புதுச்சேரி, ஜூலை 6- மின்கட்டண உயர்வை உடனே திரும்ப பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கட்சியின் புதுச்சேரி நகரக் குழு செயலாளர் எம்.பி. மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த பிரதேசக் குழு உறுப்பினர் முருகன் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார். பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற் குழு உறுப்பினர் சத்தியா, பிரதேசக் குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, சரவணன், சந்திரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக முதலியார் பேட்டை வானொலி திடலில் துவங்கிய சைக்கிள் பிரச்சாரம் நெல்லித்தோப்பு, சாரம் ஆகிய பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரம் செய்தனர். அதேபோல் பாகூர் தாசில்தார் அலுவல கம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெரு மாள் போராட்டத்தை துவக்கிவைத்து பேசி னார். பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலியன், சரவணன், இராமமூர்த்தி, இளவரசி, கொம்யூன் குழு உறுப்பினர்கள் முத்து லிங்கம், சண்முகம், செல்வராசு, அரிதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நியாய விலைக் கடையில் தங்கு தடை யின்றி இலவச அரிசை வழங்க வேண்டும், சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவது போல் மஞ்சள் அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும், உயர்த்திய மின்கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும், குடிநீர், வீட்டு வரியை குறைக்க வேண்டும், குப்பை வரியை திரும்பப்பெற வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை புணரமைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டத்தை உடனே துவக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.