tamilnadu

img

மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்ய உடனடியாக ரூ.1000 கோடி வழங்குக!

பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

சென்னை,ஏப்.27- மருத்துவ சாதனங்களை கொள் முதல்  செய்ய உடனடியாக ரூ.1000 கோடியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி யுள்ளார்.

 ஏப்ரல் 27  திங்களன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரத மர் மோடி காணொலிக் காட்சி மூலம் கொரோனா நோய் தொற்று பற்றிய கலந்தாய்வுக் கூட்டத்தினை நடத்தி னார். இதுவரை நடைபெற்ற காணொலி காட்சிகளில் பேசாத முதலமைச் சர்கள் இதில்  பேசினர். நேரமின்மை காரணமாக, பிற மாநில முதலமைச் சர்கள் அனைவரும் தங்களது கருத்துக் களை  பிரதமருக்கு பேக்ஸ் வாயி லாக அனுப்பக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு முதல மைச்சர்  எடப்பாடி. பழனிசாமி பிரதம ருக்கு தனது கருத்துகளை அனுப்பி னார்.  

அதன் விபரம் பின்வருமாறு: தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங் கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப் படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடி நீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கை யால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 54 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

கூடுதல் பரிசோதனை கருவிகள் 

தமிழகத்திற்கு மத்திய அரசு, பிசிஆர் டெஸ்ட் கிட்டுகளை கூடுத லாக அனுப்ப வேண்டும். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு உடனே நிதியை விடுவிக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்ட தொழிலா ளர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க அனுமதிக்க வேண்டும்.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கான 50 சதவீத நிதியை விடுவிக்க வேண் டும். விவசாயிகள் நேரடியாக விளை பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்ய தமிழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடியை விடு விக்கவேண்டும். பெருநிறுவன சமூக பொறுப்பு திட்ட நிதியை முதல மைச்சர் நிவாரண நிதிக்கு பெற்றுக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும், ரேசன் அட்டைதாரர்களுக்கு உண வுப்பொருட்களை கொள்முதல் செய்து இலவசமாக விநியோகம் செய்வதற்காக  கூடுதலான தொகை யை விடுவிக்க வேண்டும். கொள் முதல் செய்யப்பட்ட நெல்லை அரிசி யாக மாற்றி விநியோகம் செய்ய ரூ. 1321 கோடி மானியத்தை முன்கூட் டியே  விடுவிக்க வேண்டும். 

வட்டியை தள்ளுபடி செய்க! 

சிறு, குறு தொழில்துறை பெற் றுள்ள கடன்களுக்கான வட்டியை 6 மாதம் தள்ளுபடி செய்ய வேண் டும். ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி யை செலுத்த  6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும். டிசம்பர்- ஜனவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும். மின்சாரத்துறை பெரும் சுமையை தாங்கிக்கொண்டிருப்பதால் அதற் கான நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

கோவிட் 19 தொடர்பான மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்ய 42 நிறுவனங்கள் பணிகளை தொடங்கியுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

பிரதமர் உரை

கொரோனா பாதிப்புக்குப் பிறகு காணொலிக்காட்சி மூலம் முதல மைச்சர்களுடன் பிரதமர் கலந்துரை யாடல் மேற்கொள்வது இது நான்கா வது முறையாகும். 

இதில் பிரதமர் மோடி பேசியதா வது: ஊரடங்கு நிலை அமல் செய் யப்பட்டதால் நல்ல பலன்கள் கிடைத் துள்ளன. கடந்த ஒன்றரை மாத காலத் தில் இந்தியாவில் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் காரணமாக, நம்மால் நிறைய உயிர்களைப் பாதுகாக்க முடிந்துள் ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பின் அபாயம் இன்னும் முடிந்து விட வில்லை. தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். வரக் கூடிய மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த வரும் நாட்கள் முகக்கவச உறைகள் மற்றும் முகத்தை மூடும் துணிகள் நம் வாழ்வின் அங்கமாகிவிடும். இந்தச் சூழ்நிலையில் துரிதமான செயல் பாடு என்பது தான் எல்லோருடைய நோக்கமாக இருக்க வேண்டும்.  

நமது பொருளாதாரத்துக்கு முக் கியத்துவம் தருவதுடன், கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான நட வடிக்கைகளையும் தொடர வேண் டும். கோவிட்-19க்கு எதிரான நட வடிக்கைகளில் நாட்டின் முயற்சி களை பலப்படுத்தும் வகையில் நிறைய பேர் ஆரோக்கிய சேது செய லியைப் பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.  நாம் தைரி யமாக இருக்க வேண்டும். சாமானிய மக்களின் வாழ்வுக்குத் தேவையான வகையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் . நோய்த் தாக்கு தலை சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்கவும், புதுமைச் சிந்தனை ஆராய்ச்சிகளைப் பலப்படுத்தவும் பல்கலைக்கழகங்களுடன் இணை ந்து செயல்பட வேண்டும்.  

நோய்த் தாக்குதல் அதிகமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் - சிவப்பு மண்டலப் பகுதிகளில் - அர சின் வழிகாட்டுதல்களைக் கடுமை யாகப் பின்பற்றுவதற்கு மாநிலங்கள் முக்கியத்துவம் தர வேண்டும். சிவப்பு மண்டலங்களை, ஆரஞ்சு மண்டலங்களாக மாற்றி, பிறகு அவற்றை பச்சை மண்டலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநி லங்கள் மேற்கொள்ள வேண்டும்  இவ்வாறு மோடி பேசினார்.

காவலர்-மருத்துவர்களுக்கு முதல்வர்கள் நன்றி

வைரஸ் தாக்குதலைக் கட்டுப் படுத்த தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் முதல மைச்சர்கள் எடுத்துக் கூறினர். சர்வ தேச எல்லைகளில் தீவிர கண்கா ணிப்பு இருக்க வேண்டியதன் அவசி யம் குறித்தும், பொருளாதார சவால் களை முறியடிக்க நடவடிக்கைகள்  எடுக்க வேண்டியது குறித்தும், சுகா தாரக் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் முதலமைச்சர்கள் பேசி னர். கோவிட்-19 நோய்த் தாக்குத லுக்கு எதிரான நடவடிக்கைகளில் காவல் துறையினரும், மருத்துவ அலுவலர்களும் அற்புதமான சேவை செய்து வருவதாக முதல மைச்சர்கள் அவர்களுக்கு நன்றி களை தெரிவித்துக் கொண்டனர்.