80 சதவிகித நோயாளிகள் தானாகவே குணமாகின்றனர்!
புதுதில்லி, மார்ச் 23- 80 சதவிகித கொரோனா நோயா ளிகள் தானாகவே குணமடைகின்ற னர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research- ICMR) இயக்கு நர் ஜெனரல் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று குறித்து, மக்கள் சரியாக புரிந்து கொள்வது அவசியம். கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களில் 80 சத விகிதம் பேர் குளிர் காய்ச்சலை அனுபவிக்கின்றனர். ஆனால், அவர்கள் தானாகவே சரியாகி விடுகின்றனர். 20 சதவிகிதம் பேர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற வற்றை அனுபவிக்கக்கூடும். இவர் களில் 5 சதவிகிதம் பேர் தீவிர பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களைத்தான் மருத்துவ மனைகளில் அனுமதித்து, போது மான சிகிச்சை அளிக்க வேண்டிய தாகிறது. மேலும் சிலருக்கு புதிய மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.
80 சதவிகிதம் பேர் தானாகவே குணமாகின்றனர் என்றாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் பரி சோதனை செய்துகொள்ள வேண் டியது அவசியம். இதுவரை 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் பேருக்கு சோதனை களை நடத்தி இருக்கிறோம். தினந் தோறும் 10 ஆயிரம் பரிசோதனை களை நடத்தும் திறன் இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் உண்டு. அதாவது வாரத்திற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் சோதனைகளை நடத்த முடியும். கொரோனா வைரஸ் நோயாளி களுக்கு சிகிச்சையளிப்பதற்கு என்றே, ஹரியானாவின் ஜஜ்ஜா ரில் 800 படுக்கைகள் கொண்ட எய்ம்ஸ் கட்டடம், தயாராக உள்ளது. வைரஸ் சங்கிலியைத் தடுக்க மக்களிடம் இருந்து ஒருவரை ஒரு வர் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். காற்றில் கொரோனா வைரஸ் பரவாது. தண்ணீர்த் துளி கள் மூலம் இது பரவும். இவ்வாறு பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.