விசாகப்பட்டினம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தனது பணி அவசியம் எனக் கருதிய ஐஏஎஸ் அதிகாரி, பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பியுள்ளார்.
ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் குமல்லா ஸ்ரீஜனாவுக்கு 22 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியது. இந்தத் தருணத்தில் தனது பணி நாட்டிற்கு அவசியம் எனக் கருதிய சிரிஜனா தனது பேறுகால விடுப்பை ரத்து செய்துவிட்டு தனது குழந்தையோடு பணிக்குத் திரும்பியுள்ளார். குமல்லா ஸ்ரீஜனா ஐஏஎஸ் 2013-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவராவர். இவரது கணவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
குமல்லா ஸ்ரீஜனாவின் அர்ப்பணிப்பு உணர்வை ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டியுள்ளது. அதிகாரிகள் சங்கம் தனது ட்விட்டர் பதிவில், " ஜி.வி.எம்.சி விசாகப்பட்டினம் கமிஷனர், திருமதி குமல்லா ஸ்ரீஜனா ஒரு மாத குழந்தையுடன் மகப்பேறு விடுப்பு இல்லாமல் சேவை செய்ய மீண்டும் பணியில் சேர்ந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளது.