tamilnadu

img

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் முதல்கட்டமாக  பெறப்போகும் 13 நாடுகள்

புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு  பேரூதவியாக இருக்கும் எனக் கூறப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகளை  முதற்கட்டமாக பெறும் 13 நாடுகளின் பட்டியலுக்கு இந்தியா அனுமதியளித்துள்ளது.  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) வழங்கப்போகும்  முன்னுரிமை பட்டியலில் உள்ள 13 நாடுகளில்  அமெரிக்கா, ஸ்பெயின்,  ஜெர்மனி,  பஹ்ரைன், பிரேசில், நேபாளம் பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்காளதேசம், சீஷெல்ஸ், மொரீஷியஸ், டொமினியன் குடியரசுகள் ஆகியவை அடங்கும்.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தம்மு ரவி கூறியதாவது:-
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கு உலகளவில் அதிக தேவை உள்ளது. பல நாடுகள் மருந்து தேவைத என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன, உள்நாட்டு  தேவைகள் போக ஏற்றுமதி நோக்கங்களுக்காக உபரி மருந்தை வெளியிட அமைச்சரவை  குழு முடிவு எடுத்தது. முதற்கட்டமாக 13 நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் முதல் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா 48 லட்சம்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கேட்டுள்ளது. 35,82 லட்சம் மாத்திரைகளை வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.முதற்கட்டமாக பிரேசிலுக்கு 0.53 மெட்ரிக் டன், ஜெர்மனிக்கு 1.5 மெட்ரிக் டன் மாத்திரைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பங்களாதேசத்திற்கு முதல் சுற்றில் 20 லட்சம் மாத்திரைகள், வழங்கப்படுகிறது. தவிர ஆப்கானிஸ்தானத்திற்கு ஐந்து லட்சம் மாத்திரைகள், மாலத்தீவிற்கு இரண்டு லட்சம் மாத்திரைகளும்  வழங்கப்பட உள்ளது. நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு தலா 10 லட்சம் மாத்திரைகளும், பூடானுக்கு இரண்டு லட்சம் மாத்திரைகளும் இரண்டாம் சுற்றில் வழங்கப்படும்.

பிரேசில், கனடா,  ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு தலா 50 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மாத்திரைகள் வேண்டுமென வற்புறுத்தியுள்ள நிலையில் அந்த நாடுகளுக்கு  இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. தவிர 430 மில்லின் பாராசிட்டமால் மாத்திரைகளையும் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது. பாராசிட்டமால் மாத்திரைகளை இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகள் பெறவுள்ளன.