புதுதில்லி:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. டிசம்பர் வரை, இவற்றை திறப்பதற்கு வாய்ப்பு இல்லைஎன்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அந்தந்த கல்வி நிலையங்கள் மூலம், ஆன்லைன் வழியாக 2 மாதங்களாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புக்களை பாடம் நடத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர் கள் இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை.ஆன்லைன் வழிக் கல்விக்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள இணைப்பு அவசியம் என்ற நிலையில், அவை இல்லாத சாதாரண ஏழை - எளிய நடுத்தர குடும்பத்துகுழந்தைகள், ஆன்லைன் வகுப்புகளுக்கு வெளியே நிறுத்தப்பட் டுள்ளனர். கொரோனா கால வேலைமற்றும் வருவாய் இழப்புக்கு இடையே புதிய ஸ்மார்ட் போன் களை எவ்வாறு வாங்குவது என்றுபெற்றோர்களும் தவியாய்த் தவித் துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் உரிமை அமைப்பான ‘க்ரை’ (CRY – Child Rights and You) ஓரளவு முன்னேறிய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும்தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில், 11 முதல் 18 வயது வரையிலான5 ஆயிரத்து 987 மாணவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.இதில், ஆன்லைன் வகுப்புக்குஅழைக்கப்பட்டுள்ள 94 சதவிகிதமாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் கள் அல்லது இணையதள வசதிஇல்லை என்பது தெரியவந்துள்ளது. 6 சதவிகித மாணவர்களுக்கே ஸ்மார்ட்போன்கள் உள்ளன. 29 சதவிகிதத்தினர் தங்கள் குடும்பத்தினரின் போன்களை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 55 சதவிகிதத்தினர் வாரத்துக்கு 3 அல்லது அதற்கு குறைவான நாள்கள்தான் போன் களை பயன்படுத்த முடிகிறது. மேலும், 77 சதவிகிதம் பேர் நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே போன்கள் பயன் படுத்துகின்றனர்; 95 சதவிகித குடும் பங்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.குறிப்பாக, தமிழ்நாட்டில், 1740 பேரில் வெறும் மூன்று சதவிகிதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்போன்கள் இருப்பதும் தெரியவந் துள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் மிகுந்தகவலை அளிப்பதாகவும் ‘க்ரை’ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.