புதுதில்லி:
கடந்த 2014-ஆம் ஆண்டு, நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசுமத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே வரிவிதிப்பை கடுமையாக்கி வருகிறது.இந்நிலையில், வருமான வரிச் சட் டத்தை மேலும் கடுமையாக மோடி அரசு முடிவு செய்துள்ளதாகவும், நிறுவனங்கள் தங்களது நுகர்வோரின் அதிகபட்ச மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து, வருமான வரித்துறைக்கு அறிக்கை அளிப்பதை கட்டமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.
இதன்படி, ரூ. 20 ஆயிரத்திற்கான மேலான ஹோட்டல் பில் செலுத்துவோர், ரூ. 20 ஆயிரத்திற்கு மேலான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவோர், ஆண்டுக்கு ரூ. 20ஆயிரத்திற்கு மேல் சொத்து வரி செலுத்துவோர், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் ஆயுள் காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவோர்; ரூ. 1 லட்சத்துக்கு மேல்நகைகள், மின்சாதன பொருட்கள், ஓவியங்கள், பளிங்குக் கற்கள் வாங்குவோர் குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வருமான வரித் துறைக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
ஓராண்டில், ரூ. 1 லட்சத்திற்கான கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடைகள், ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான மின்சார பில், பிஸினஸ் கிளாஸில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விமான பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணம்,ரூ.50 லட்சத்துக்கு மேல் வங்கியின் நடப்பு கணக்கில் வைப்பு அல்லது வரவுவைப்பது, நடப்புக் கணக்கு அல்லாதபிற வங்கிக் கணக்கில், 25 லட்சத் துக்கு வைப்பு அல்லது வரவு வைப்பதுஆகியவை தொடர்பாகவும் விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.இதன்மூலம், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையில் (ஐடிஆர்) காட்டியுள்ள வருமானத்திற்கு ஏற்ப அவர்களின் செலவு இருக்கிறதா? என்பதை சோதிக்க முடியும் என்று அரசு கணக்கு போட்டுள்ளது.