புதுதில்லி:
மோடி பதவியேற்பு நாளில், பாஜக இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை, உடனுக்குடன் ஒளிபரப்ப, தில்லி பாஜக இணையதளம் முடிவு செய்திருந்த நிலையில், அதனைத் தடுக்கும் விதமாகவே ஹேக்கர்கள் இவ்வாறு செய்தாக கூறப்படுகிறது. பாஜக இணையதள பக்கத்தில், வழக்கமாக மோடி அல்லது அமித்ஷா படம் முகப்பில் இடம்பெற்றிருக்கும். ஹேக்கர்களோ, அந்த இடத்தில், பன்றிக்கறி வறுவல் படத்தையும், அதற்கான செய்முறைக் குறிப்பையும் பதிவேற்றியுள்ளனர்.