tamilnadu

img

அரசு ரூ.2.2 லட்சம் கோடி மட்டுமே கூடுதலாக செலவிடப் போகிறது... மீதியெல்லாம் பட்ஜெட்டிலேயே கூறப்பட்டவைதான்

புதுதில்லி:
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை சரிசெய்வதற்காக, ரூ. 20 லட்சத்து 90 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வகுத்திருப்பதாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.

இந்நிலையில் “20 லட்சம் கோடிரூபாய் நிதித்தொகுப்பு என்று கூறினாலும், அரசுக்கு புதிதாக ஏற்படவுள்ள செலவு என்று பார்த்தால், 2 லட்சத்து 20 ஆயிரம் கோடிதான்” என்று “எர்ன்ஸ்ட் அண்ட் யங்” தலைமை கொள்கை வகுப்பாளர் டி.கே. ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.“இறுதி நிலவரத்தின்படி, மத்திய அரசின் பொருளாதார நிவாரண அறிவிப்பு மொத்தமாக ரூ. 20லட்சத்து 97 ஆயிரம் கோடியாகும். இது ஜிடிபி-யில் 9.8 சதவிகிதம். எனினும், மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் கூடுதலாக 2 லட் சத்து 20 ஆயிரம் கோடிதான் அரசுக்கு நேரடிச் செலவு ஏற்படும். மற்றபடி 1 லட்சத்து 55 ஆயிரம் கோடிரூபாய் ஏற்கெனவே உள்ள பட்ஜெட்செலவினங்களுடன் தொடர்புடையதுதான்” என்று அவர் தெரிவித் துள்ளார்.

அத்துடன், “ரூ. 21 லட்சம் கோடியில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி போக, மீதியுள்ள 85 சதவிகிதம் தொகை, ரிசர்வ் வங்கியின் நிதிஅறிவிப்புக்கள், கடன் உத்தரவாதத்திட்டங்கள் மற்றும் இன்சூரன்ஸ்
திட்டங்களைத் தொடர்புபடுத்துவது மட்டுமே ஆகும்” என்று கூறியுள்ளஸ்ரீவஸ்தவா, “அரசின் இந்த அறிவிப்புகளை அமைப்புசார் சீர்திருத்தங்கள் என்றுதான் சொல்லமுடியுமே தவிர, நிவாரண நடைமுறைகள் என்று கூற முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.